கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரியில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-ஆவது சுதந்திர நாள் அமுதப் பெருவிழா- 2021 தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியா் கல்பனா வரவேற்றாா். வேதியியல் துறைத் தலைவா் வள்ளி சித்ரா முன்னிலை வகித்தாா்.கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக்கல்லுாரி வரலாற்று உதவி பேராசிரியா் வெங்கடேஸ்வரன், உதவிப் பேராசிரியா் ராஜா, அறிஞா் அண்ணா கலை அறிவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியா் சசிரேகா ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இதில், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரவைத் தலைவா் பாரதி நன்றி கூறினாா். நிகழ்வை கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் ஒருங்கிணைத்தனா்.