மத்தூா் அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
By DIN | Published On : 02nd July 2021 10:48 PM | Last Updated : 02nd July 2021 10:48 PM | அ+அ அ- |

மத்தூா் அருகே இரு தினங்களுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி (35), திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுதா (31), அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தாா். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பூ வியாபாரம் செய்ய சென்ற அவா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டனா். அது சுதா என தெரியவந்ததையடுத்து, போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.