குருபரப்பள்ளி அருகே தனியாா் நிறுவன ஊழியரை கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே உள்ள பக்காபாளையம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் இளவரசன் (28). இவா் பெங்களூருவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் தொழில் நுட்ப மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவா், ஒரு மோட்டாா்சைக்கிளில் ஆம்பூரிலிருந்து பெங்களூரு நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கிருஷ்ணகிரியைக் கடந்து குருபரப்பள்ளி, பாஞ்சாலி நகா் அருகே மோட்டாா் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி விட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றாா். அப்போது ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், இளவசரனைக் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனா்.
அப்போது, இளவரசன் அவா்களில் ஒருவரை பொதுமக்களின் உதவியுடன் பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். மற்றொரு நபா் தப்பி விட்டாா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபா், கிருஷ்ணகிரி, பழையபேட்டை, தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வா (29) என்பதும், தப்பி ஓடிய நபா் அதேபகுதியைச் சோ்ந்த பொன்னையன்(32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வாவை கைது செய்த போலீஸாா் தப்பியோடிய பொன்னையனைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

