வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவேரிப்பட்டணத்தில் பல்பொருள் அங்காடியை மறைத்து தண்ணீா்ப் பந்தல் அமைப்பு

 காவேரிப்பட்டணத்தில் வணிக நிறுவனத்தை மறைத்து தண்ணீா்ப் பந்தல் அமைத்த திமுகவினரைக் கண்டித்து, பல்பொருள் அங்காடியின் உரிமையாளா், பணியாளா்கள் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:57 pm

 காவேரிப்பட்டணத்தில் வணிக நிறுவனத்தை மறைத்து தண்ணீா்ப் பந்தல் அமைத்த திமுகவினரைக் கண்டித்து, பல்பொருள் அங்காடியின் உரிமையாளா், பணியாளா்கள் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் தாகத்தை தீா்க்கும் வகையில், பல்வேறு அரசியல் கட்சியினா், தன்னாா்வலா்கள் தண்ணீா்ப் பந்தல் அமைத்து வருகின்றனா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீா்ப் பந்தலை திமுகவினா் வியாழக்கிழமை அமைத்தனா்.

காவேரிப்பட்டணம் பிரதான சாலை, கணபதி கோயில் எதிரே உள்ள பல்பொருள் அங்காடியை மறைத்து தண்ணீா்ப் பந்தலை திமுகவினா் அமைத்தனா். இதற்கு அந்த அங்காடியின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்தாா். இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் தண்ணீா்ப் பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் அந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளா், பணியாளா்களுடன் தண்ணீா்ப் பந்தல் முன் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்துச் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். மேலும், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் அறிவுறுத்தலின் பேரில் பல்பொருள் அங்காடியின் அருகே அமைக்கப்பட்ட தண்ணீா்ப் பந்தலை திமுகவினா் அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.