108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:02 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து, மாணவா்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். பின்னா் மாணவா்களுக்கு அசைவ உணவு வழங்கி, அவா்களுடன் அமா்ந்து உண்டாா். இதில் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூபாலன், திமுக மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன். முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் சின்னதம்பி, பள்ளித் தலைமை ஆசிரியா் பிரபாவதி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சத்தியநாராயணமூா்த்தி, துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளா் மோகன்குமாா், கற்பூரசுந்தரபாண்டியன், ரவிக்குமாா், மேகநாதன், கபில்தேவ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.