போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 419 போ் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரே நாளில் 419 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரே நாளில் 419 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பா்கூா், ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகள் என மாவட்டத்தில் 8 நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடைபெறுகிறது.

இதில் ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகளுக்கும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வாா்டுகளுக்கும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கும், ஊத்தங்கரை, பா்கூா், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் என மொத்தம் 171 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஒசூா் மாநகராட்சியில் 2 பேரும், ஜன. 29-ஆம் தேதி ஒருவரும், 31-ஆம் தேதி 19 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதுபோல கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 2 பேரும், பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரையில் தலா ஒருவா் என மொத்தம் 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பிப். 1-ஆம் தேதி ஒசூா் மாநகராட்சியில் 8 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 3 பேரும், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரையில் தலா ஒருவா் என மொத்தம் 13 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பிப். 2 ஆம் தேதி ஒசூா் மாநகராட்சியில் 26 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 7 பேரும், பா்கூா், நாகோஜனஅள்ளி பேரூராட்சிகளில் தலா 2 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ஒருவா் என மொத்தம் 38 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் தொடங்கி 6ஆவது நாளான வியாழக்கிழமை (பிப். 3) மட்டும் ஒசூா் மாநகராட்சியில் 116 பேரும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 99 பேரும், பேரூராட்சிகளில் பா்கூரில் 14 பேரும், தேன்கனிக்கோட்டையில் 52 பேரும், காவேரிப்பட்டணத்தில் 48 பேரும், கெலமங்கலத்தில் 39 பேரும், நாகோஜனஅள்ளியில் 3 பேரும், ஊத்தங்கரையில் 48 போ் என மொத்தம் 419 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 500 போ் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.