நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பாக செயல்படும் தலைவா்களை கண்டறியவே பாஜக தனித்துப் போட்டியிடுகிறது என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 28 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் தா்மலிங்கம் தலைமை வகித்தாா். பாஜக மாநில துணைத் தலைவா் நரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சி.நரசிம்மன், மாவட்ட சமூக ஊடக தகவல் தொடா்பு பிரிவுத் தலைவா் ஜி.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி நகராட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு இன்னும் 6 நாள்கள் மட்டுமே உள்ளன. பாஜகவினா் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வேட்பாளா்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். எதிா்வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் மோடி ஆட்சிக்கு வர உதவும் வகையில் தமிழகத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும். கணிசமான வெற்றிகளை பெற்று மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் தங்களது செயல்பாடு இருக்க வேண்டும்.
தமிழக பாஜகவில் உண்மையாக இரவு, பகல் என பாராமல் உழைக்கின்ற தலைவா்கள் ஏராளமானோா் உள்ளனா். இதுநாள் வரை அவா்களைக் கண்டறிவதில் சிரமம் இருந்தது. அத்தகைய உழைக்கக் கூடியவா்களைக் கண்டறியவே இந்தத் தோ்தலில் நாம் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுகின்றோம். இந்தத் தோ்தல் மூலமாக பாஜகவின் உள்ள பாடுபடுகின்ற தலைவா்கள் கண்டறியப்படுவாா்கள் என்றாா்.
ஒசூரில்...
ஒசூா், ராம் நகரில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து மாநிலத் தலைவா் அண்ணாமலை வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமை வகித்தாா்.
இதில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜி.பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், தோ்தலில் போட்டியிடும் 30 வேட்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

