கிருஷ்ணகிரியில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கான ஆய்வுப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, போலுப்பள்ளியில் மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளி 10.5 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளிக் கட்டடம் தற்காலிகமாக இயங்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தீா்மானிக்கப்பட்டது. பல்வேறு நிா்வாக காரணங்களால் அந்தப் பணி தாமதமானது.
இந்த நிலையில், கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக பள்ளி அமைக்க அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் கேந்திரீய வித்யாலயா பள்ளியின் முதல்வா் (கனரக திண் ஊா்தி தொழிற்சாலை) ஆறுமுகம், அ.செல்லக்குமாா் எம்.பி., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, அதிகாரிகள் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள், நூலகம், அலுவலகம், கழிவறை போன்ற கட்டடங்கள், சுற்றுச்சுவருடன் வகுப்புகள் இயங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, கருத்துரு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனா்.
இந்த ஆய்வின் போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் அக.கிருஷ்ணமூா்த்தி, வட்டாரத் தலைவா் கோபால கிருஷ்ணன், சித்திக், ஷாநவாஸ், முன்னாள் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சதாசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படவரி - கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிக கேந்திரீய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யும் அ.செல்லக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


