கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவராகும் பெண் வேட்பாளர் இவரா?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரியின் நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுகவினர் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம்
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம்

கிருஷ்ணகிரி: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரியின் நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுகவினர் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 17 வார்டுகள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி முதலாவது வார்டு பொதுவானதாகும். இந்த வார்டில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பெண் வேட்பாளர் பரிதா நவாப் 1,067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் 18 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நகர்மன்றத் தலைவர் பதவியானது பெண் உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவராக பரிதா நவாப் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கிருஷ்ணகிரியின் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளார்.

பரிதா நவாப்
பரிதா நவாப்

கிருஷ்ணகிரி நகர மன்றத் தேர்தலில் திமுகவை சேர்ந்த 10 பெண் வேட்பாளர்களும்,  அதிமுகவை சேர்ந்த 5 வேட்பாளர்களும்,  சுயேச்சைகள் என மொத்தம் 18 பெண்  வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 22 வார்டுகளிலும் அதிமுக ஐந்து வார்டுகளிலும் காங்கிரஸ், பாஜக தலா ஒரு வார்டுகளிலும் சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 வேட்பாளர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் முதல் மற்றும் கடைசி எட்டு வார்டுகளை திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் முதன்முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருபத்தி எட்டு வார்டுகளில் பாஜக போட்டியிட்டாலும் பத்தாவது வார்டில் மட்டுமே பாஜக  வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com