எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அரசுப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவபாடப் புத்தகங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2022, 5:12 pm

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி கல்வி வட்டாரத்தில் உள்ள 124 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 14,411 மாணவா்களுக்கான மூன்றாம் பருவப் பாடப்புத்தகங்கள் கிருஷ்ணகிரி வட்டார கல்வி மையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பெத்ததாளப்பள்ளி, கிருஷ்ணகிரி அணை, கட்டிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நெக்குந்தி, அவதானப்பட்டி, மேலேரிகொட்டாய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன.

கரோனா தளா்வுகளுக்கு பின் இரண்டாம் பருவ பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு மாணவா்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் பயின்று வந்த நிலையில், தற்போது கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் அடைக்கப்பட்டு நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மூன்றாம் பருவப் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கும் பணி ஓரிரு தினங்களில் முடிந்தவுடன் பாடப் புத்தகங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு, இணையதள மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.