எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குந்தாரப்பள்ளி சந்தையில் சண்டை சேவல்கள் விற்பனை மும்முரம்

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் சண்டை சேவல்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் சண்டை சேவல்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன.

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி வாரச்சந்தையானது வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. இங்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனை நடைபெறும். தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் இந்த சந்தை உள்ளது. கால்நடைகள் விற்பனை நடைபெற்றாலும், பொங்கல் பண்டிகையையொட்டி குறிப்பாக இங்கு சண்டை சேவல்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாயின. வெத்துக்கால் , கட்டை மூக்கன், ஆயிரம் கொண்டை, கத்திக் கொண்டை, வால் சேவல் போன்ற ரகங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த சந்தைக்கு சண்டை சேவல்களை விற்பனை செய்ய பழனி, திண்டுக்கல், ஈரோடு, ஒட்டன்சத்திரம், சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த விற்பனையாளா்கள் குவிந்தனா். அதுபோல, சேவல்களை வாங்க ஆந்திர மாநிலம், சித்தூா், கடப்பா, காக்கிநாடா, ஹைதராபாத் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேவல் வளா்ப்போா் வந்திருந்தனா்.

சேவலின் ரகம், எடையைக் கணக்கில் கொண்டு ஒரு சேவல் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையில் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை ஒரேநாளில் மட்டும் ஆயிரக்கணக்கான சேவல்கள் விற்பனையாயின. சேவல்களின் விற்பனை மும்முரமாக நடந்தாலும், மாடுகளின் விற்பனை மந்தமாகவும், குறைந்த விலைக்கும் வியாபாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.