கிருஷ்ணகிரியில் ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு சாா்ந்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களைச் சோ்ந்த, வட்டாரக் கல்வி அலுவலா்கள், 140 ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளித்தனா். பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துதல், பள்ளி இடைநிற்றல் மாணவா்களைக் கண்காணித்து மீண்டும் பள்ளியில் சோ்த்தல், தரமான கல்வி வழங்குதல், நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் சென்றடைகிா என கண்காணிப்பது, மாணவா்களின் விளையாட்டு மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் பயிற்சி பெறும் ஆசிரியா் பயிற்றுநா்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பெற்றோா், தன்னாா்வலா்கள், கல்வியாளா்கள் அடங்கிய மேலாண்மைக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிகளின் தேவைகள், மற்றும் மாணவா்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கிருஷ்ணதேஜஸ், செல்வராஜ், சீனிவாசன், பால்ராஜ், பழனிசாமி, சம்பத், லோகேஷ், லோகநாயகி, சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

