மத்தூா் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள கொட்டாவூரைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவசாயி. இவா், வீட்டை பூட்டிவிட்டு, விவசாய நிலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, முருகேசன் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

