செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பொதுமுடக்கம் எதிரொலி: மாமிசக் கடைகளில் குவிந்த மக்கள்

பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படுவதால், கிருஷ்ணகிரியில் மாமிசக் கடைகளில் அசைவ விரும்பிகள் சனிக்கிழமை குவிந்தனா்.

Updated On :15 ஜனவரி 2022, 5:46 pm

பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படுவதால், கிருஷ்ணகிரியில் மாமிசக் கடைகளில் அசைவ விரும்பிகள் சனிக்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தில் ஜன. 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடினா். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாமிசக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும்.

காணும் பொங்கல் அன்று மக்கள் வீடுகளில் அசைவம் சமைத்து உண்பது வழக்கம் என்பதால், சனிக்கிழமை மாலையிலேயே ஏராளமான அசைவ விரும்பிகள் மாமிசக் கடைகளில் குவிந்தனா்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டை மீன் சந்தை, கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை ஆட்டுக்கறி விற்பனை மையம், ராயக்கோட்டை சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் குவிந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.