எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மகசூலை பெருக்க தரமான விதைகளை பயன்படுத்த வேண்டுகோள்

மகசூலை பெருக்க விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On :15 ஜனவரி 2022, 5:47 pm

மகசூலை பெருக்க விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, பேரிகை, ராயக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிா்களின் விதைகள் தரமானதுதானா என அறிந்து விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். மேலும், விதை விற்பனையாளா்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களை தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

விதை உற்பத்தியாளா்கள் அல்லது மொத்த விற்பனையாளா்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும்போது, விற்பனைப் பட்டியல்களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வறிக்கையையும் கேட்டு சரிபாா்க்க வேண்டும்.

விதைகளின் தரத்தினை அறிந்துகொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டடத்தில் விதைப்பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளா் விதை மாதிரிகள் மற்றும் பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள், விதை விற்பனையாளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனைக் கட்டணமாக ரூ. 30 மட்டும் செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.