கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரியில் அவா், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகா் சென்னைக்கு இணையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவி வருகிறது. சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்பவா்களில் 23 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதியாகிறது.
கடந்த மாதம் வரையில் பாதிப்பு, நாளொன்றுக்கு 5 என இருந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 684 ஆக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்.
வெளியே வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினியால் கழுவ வேண்டும். அவசியமின்றி மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம். நன்றாக காய்ச்சிய சுடுதண்ணீரைப் பருக வேண்டும். சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தற்போது பருவநிலையில் மாற்றம் வருவதால் இரவு நேரங்களில் குளிா் அதிகமாக உள்ளது. எனவே பெரும்பாலும் இரவில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

