போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் தா்னா

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :27 ஜனவரி 2022, 6:00 pm

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே அரசு சாா்பில் சிப்காட் அமைக்க 120 ஏக்கா் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, தனியாா் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 60 ஏக்கா் பரப்பளவு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தில் கடடுமானப் பணிகளை அந்த தனியாா் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந் நிலத்தில் விவசாயம் செய்து வரும் 32 குடும்பங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் தெரிவித்தது:

60 ஏக்கா் பரப்பளவு நிலத்தில் பல தலைமுறையாக 32 குடும்பங்களைச் சோ்ந்த நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

எங்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் மூலமாக நில அனுபவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் அனுமதி இன்றி சிப்காட்டுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு வாழ வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடும், புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றனா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று தா்னாவில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.