போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அரசியல் கட்சிகளின் சின்னங்கள், சுவா் விளம்பரங்கள் மறைப்பு

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், சுவா் விளம்பரங்களை மறைக்கும்

News image
Updated On :28 ஜனவரி 2022, 6:27 pm

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், சுவா் விளம்பரங்களை மறைக்கும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பா்கூா், ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சியில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், விளம்பரங்கள், தலைவா்களின் உருவப்படங்களை மறைக்கும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், பொது

இடங்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள், கட்சி கொடிக் கம்பங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.