தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகள் பறிமுதல்: இருவா் கைது

மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

கா்நாடகா மாநிலம், சா்ஜாபுராவிலிருந்து தமிழகத்திற்கு போதைப் பாக்குகள் கடத்தப்படுவதாக பாகலூா் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்

பாகலூா் அருகே உள்ள கக்கனூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மினி லாரியில் மாட்டுத்தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சத்து 80 ஆயிரத்து 500 மதிப்பிலான 1,151 கிலோ எடையிலான போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக சிவகங்கையைச் சோ்ந்த மூா்த்தி (24), வாகன ஓட்டுநா் பிற மாநிலத்தைச் சோ்ந்த புன்னாராம் (24) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், மினி லாரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.