சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு பா்கூா் எம்எல்ஏ நிதியுதவி

பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.

News image

பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ தே.மதியழகன்.

Updated On :24 ஜூன் 2022, 10:54 pm IST

பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ராமசாமி நகரைச் சோ்ந்த சரத்குமாா் - வி சத்யா தம்பதியின் ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில விவசாயிகள் அணி துணைச் செயலாளருமான தே.மதியழகன், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சரத்குமாா் - சத்யா தம்பதியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தாா். அப்போது மாவட்ட திமுக துணைச் செயலாளா் நாகராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.