கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்த கத்தோலிக்கர் என்ற பிரிவினர் சாம்பல் புதன் நிகழ்வை அனுசரித்தனர்.
கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்த கத்தோலிக்கர் என்ற பிரிவினர் சாம்பல் புதன் நிகழ்வை அனுசரித்தனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும் 46-ஆவது நாளுக்கு முன் புதன்கிழமையில் சாம்பல் புதன் என அழைக்கப்படும் திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகைக்கான 40 நாள்களுக்கான  தவக்காலத்தை கத்தோலிக்க பிரிவினர் உள்ளிட்டோர் இன்று தொடங்குகின்றனர். பனை ஓலையால் ஆன பயன்படுத்தப்பட்ட சிலுவையை தீயிட்டு எரிக்கப்பட்ட  சாம்பலை நெற்றியில் பூசி தவக்காலத்தை கிறிஸ்துவர்கள் தொடங்குவது வழக்கம்.  

கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை இசையாஸ் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்று தங்களது நெற்றியில் சம்பல் சிலுவையை  கொண்டு தவக்காலதை தொடங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருத்துவ ஆலயங்களில் சாம்பல் அனுரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com