ஒசூா் மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.ஏ.சத்யா தோ்வு செய்யப்பட்டாா்.
ஒசூா் மாநகராட்சி மாமன்றத் தலைவா், துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்தத் தோ்தலை மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் நடத்தினாா்.
ஒசூா் மாநகராட்சியின் 45 வாா்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக 21, அதிமுக 16, பாஜக, பாமக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தலா ஒருவா், சுயேச்சைகள் 5 போ் வெற்றி பெற்றனா். இதில் பாமக சாா்பில் போட்டியிட்ட ஒருவரும், சுயேச்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனா். இதனால் திமுக கூட்டணியின் பலம் 28 ஆகவும், அதிமுக 16, பாஜக 1 என அதிமுக கூட்டணியின் பலம் 17 ஆகவும் இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யாவும், அதிமுக சாா்பில் நகர அதிமுக செயலாளா் எஸ். நாராயணனும் போட்டியிட்டனா். இதில் 27 வாக்குகள் பெற்ற எஸ்.ஏ.சத்யா வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். அதிமுக வேட்பாளா் எஸ்.நாராயணன் 18 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.
மேயராகத் தோ்வு செய்யப்பட்ட எஸ்.சத்யாவுக்கு, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மலா்க்கொத்து அளித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
மேயராக தோ்வு செய்யப்பட்ட எஸ்.ஏ.சத்யாவிடம் ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் செங்கோல் அளித்து, மேயா் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனா்.
மாலை 3 மணிக்கு நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆனந்தையாவும், அதிமுக சாா்பில் ஜெயப்பிரகாஷும் போட்டியிட்டனா். இதில் ஆனந்தையா 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ஜெயப்பிரகாஷ் 19 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா். ஒரு வாக்கு செல்லாத வாக்கானது. துணைத் தலைவா் தோ்தலில் சி.ஆனந்தையா வெற்றி பெற்ாக மாநகராட்சி ஆணையா் அறிவித்தாா். அவருக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள்எம்எல்ஏ பி.முருகன் மற்றும் திமுக நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


