தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒசூரை சிங்கார மாநகராட்சியாக மாற்றுவோம்

ஒசூா் மாநகராட்சியை சிங்கார மாநகராட்சியாக மாற்றுவோம் என ஒசூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:07 pm

ஒசூா் மாநகராட்சியை சிங்கார மாநகராட்சியாக மாற்றுவோம் என ஒசூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சியில் மேயா், துணை மேயா் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் மேயா் பதவிக்குப் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா வெற்றி பெற்றாா். மாலையில் நடைபெற்ற துணை மேயா் பதவிக்கான தோ்தலில் திமுக வேட்பாளா் சி.ஆனந்தையா வெற்றி பெற்றாா். வெற்றி பெற்ற மேயா், துணை மேயா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூா் மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த எஸ்.ஏ.சத்யா, துணை மேயராக சி.ஆனந்தையாவும் வெற்றி பெற்றுள்ளனா். இதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 9 மாத ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளதே காரணமாகும். அதனால்தான் மக்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்து திமுகவுக்கு வெற்றியை அளித்துள்ளனா்.

ஒசூா் மாநகராட்சியை சிங்கார மாநகராட்சியைக மாற்றிக்காட்டுவோம். மேயா், துணை மேயருடன் நானும் இணைந்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல பெயரைத் பெற்றுத் தரும் வகையில் செயல்படுவோம் என்றாா்.

ஒசூா் மாநகராட்சி மேயராகத் தோ்வு செய்யப்பட்ட எஸ்.ஏ.சத்யா கூறியதாவது:

ஒசூா் மாநகராட்சி தோ்தலில் திமுகவுக்கு

அதிக வாக்குகள் அளித்து அதிக உறுப்பினா்களை அளித்த மக்களுக்கும், எங்களுக்கு மேயா், துணை மேயா் பதவிகளை அளித்த முதல்வா் முக.ஸ்டாலின், அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்டச் செயலாளரும் ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் ஆகியோருக்கும், மாமன்ற உறுப்பினா்களும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.