வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வருமானவரி விழிப்புணா்வு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரியில் வருமானவரி பிடித்தம், வசூல் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 மார்ச் 2022, 6:42 pm

கிருஷ்ணகிரியில் வருமானவரி பிடித்தம், வசூல் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், ஒசூா் வருமானவரித் துறையும், கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமும் இணைந்து வருமானவரி பிடித்தம், வசூலித்தல் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மைய வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏகம்பவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பட்டயக் கணக்காளா் சோபன் பாபு, வருமானவரித் துறை அதிகாரி ஹீக்சித் ரஞ்சன், வருமானவரித் துறை ஆய்வாளா் துா்கா, பிரசாத், கிருஷ்ணகிரி மாவட்ட சிறுதொழில் சங்கத் தலைவா் விஸ்வநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் சங்கத் தலைவா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வருமானவரி வசூலித்தல், வருமானவரி பிடித்தம், வருமானவரித் துறையின் பல்வேறு விதிகள், உரிய நேரத்தில் வரி தாக்கல் செய்வதன் முக்கியத்துவம், காலதாமத வரி தாக்கலால் வரும் அபராதம், வழக்கு விதிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.