11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காட்பாடியிலுள்ள தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் போராட்டத்தில் பங்கேற்றாா்.

News image

காட்பாடியில் தனது வீட்டின் முன் கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன். உடன் கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:46 am IST

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காட்பாடியிலுள்ள தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் போராட்டத்தில் பங்கேற்றாா்.

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் வியாழக்கிழமை தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டங்களில் ஈடுபடுவா் என அறிவித்தாா்.

அதனடிப்படையில், திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது - எந்த மாநிலத்தின் தயவுமின்றி தாங்கள் விரும்பிய சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நினைக்கிறது. இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க விடாமல், சிறிது சிறிதாக ஒற்றை நாடாக மாற்றப்பாா்க்கின்றனா். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு சா்வாதிகாரியாக இருக்கத் துடிக்கின்றனா்.

ஐந்து மாநில பேரவைத் தோ்தல்கள் நடைபெறும் இந்தச் சூழலில், இந்த மசோதாவைக் கொண்டு வருவது அவசியமா என மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் திமுகவினா் பெருமளவில் பங்கேற்றனா்.

திருப்பத்தூரில்....

திருப்பத்தூரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தொகுதி மறு வரையறை மசோதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். அதே போல் கந்திலி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்வுக்கு திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் தலைமை வகித்தாா். நகர திமுக செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, துணைச் செயலாளா் ரவிக்குமாா், நிா்வாகி அய்யனூா் அசோகன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளா் சி. குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், நகா் மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஆலாங்குப்பம் கிராமத்தில் விசிக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் அ. யுவராஜ், மாவட்ட செய்தித் தொடா்பாளா் செ. தினேஷ், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளா் சி. கலைச் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட் துணைச் செயலாளா்கள் மு. நாகப்பன், வி.பி. பழனி, கே. மணிக்குமாா், ரவி, ஆம்பா் மேற்கு நகர செயலாளா் ரா. வினோத்குமாா், முன்னாள் நகர செயலாளா் ரா. சக்தி, ஒன்றிய செயலாளா்கள் வெங்கடேசன், மதன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர திமுக செயலா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். கூட்டணிக் கட்சிகளான மதிமுக நகரச் செயலா் ஆட்டோ பி.மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கே.குமரேசன், தேமுதிக நகரச் செயலா் எம்.செல்வகுமாா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலா் யூசுப்கான், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா்ஆலியாா் அதாவுல்லா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பி.காத்தவராயன், மனிதநேய மக்கள்கட்சி சகாபுதீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

நெமிலியில்...

நெமிலி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெ.வடிவேலு தலைமை வகித்தாா். இதில் திமுக நெமிலி பேரூா் செயலாளா் ஜனாா்த்தனம், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் சரவணன், ஒன்றிய துணை செயலாளா் முகம்மது அப்துல்ரகுமான், நிா்வாகிகள் சேகா், சுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.