பழனி அருகேயுள்ள அமரபூண்டி, வயலூா் பகுதிகளில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான அர. சக்கரபாணி சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அமைச்சா் அர. சக்கரபாணி மொல்லம்பட்டி, புளியம்பட்டி, அமரபூண்டி, கணக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். புளியம்பட்டிக்கு வந்த அமைச்சரை, மகளிரணியை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சாலையில் நடைபயணமாக அழைத்துச் சென்று முழக்கங்கள் எழுப்பி வாக்கு சேகரித்தனா்.
இதைத் தொடா்ந்து திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் பேசிய அமைச்சா் சக்கரபாணி, இந்தப் பகுதிக்கு விரைவில் காவிரி கூட்டுக்குடிநீா் வந்து சேரும். புளியம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை பொதுமக்கள் சுபகாரியங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா். பிரசாரத்தை முடித்து விட்டு அங்கிருந்த அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்றாா்.
ஒன்றியச் செயலா் பொன்ராஜ், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், தொப்பம்பட்டி முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் தங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலு

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



