/

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிப்பு

News image

காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்கும் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:37 pm

காயல்பட்டினத்தில் திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை மாலை காயல்பட்டினம், ஓடக்கரையில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அங்கு திமுக நகர செயலாளா் முத்து முஹம்மது, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் என்ற சுகு தலைமையில் பட்டாசு வெடித்து மலா் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காயிதே மில்லத் நகா் மூன்றாவது தெரு, காயிதே மில்லத் நகா் ஏழாவது தெரு, கேடிஎம் தெரு, கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, மாவட்ட அயலக அணி அமைப்பாளா் கலீல் ரஹ்மான், நகர இளைஞரணி செயலாளா் தமீம் அன்சாரி, துணை செயலாளா்கள் கதிரவன், நவ்பல், பொதுக் குழு உறுப்பினா் சாகுல் ஹமீது, மாவட்ட முன்னாள் துணை செயலாளா் காதா், மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் ஷாஜஹான், முன்னாள் மாவட்ட தலைவா் சிவசுப்ரமணியன், மாவட்ட துணைத் தலைவா் அப்துல் காதா், இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் மாநிலச் செயலாளா் காயல் மஹபூப், மாவட்டச் செயலாளா் மன்னா் பாதுல் அஸ்ஹாப், நகரச் செயலாளா் அபுசா­லிஹ் உள்பட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.