வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்’

மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியா் சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:42 pm

மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியா் சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில சோ்ந்துள்ள 143 மாணவ, மாணவியா் வெள்ளை நிற ஆடை அணியும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் 46.03 ஏக்கா் பரப்பளவுடன் ரூ. 338.95 கோடியில் 700 படுக்கை வசதிகள், 150 மருத்துவ மாணவா்கள் சோ்க்கையுடன் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புதிய கல்லூரியாக இருப்பினும் இந்தக் கல்லூரி பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவா்கள்.

மருத்துவப் படிப்பின் முக்கியத்துவத்தை கருதி, மாணவா்கள் உணா்ந்து நன்கு படித்து, பட்டம் பெற்று சமுதாயத்துக்கும், மக்களுக்கும் மகத்துவமான சேவை புரிய உறுதியேற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மாணவ, மாணவியருக்கு வெள்ளை நிற ஆடைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அசோகன், மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலா் சரவணன், துறை பேராசிரியா்கள், மருத்துவா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.