வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கால்நடைகளுக்கு பரவும் பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவும் பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:53 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவும் பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் வலியுறுத்தினாா்.

கிருஷ்ணகிரியில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில், துறை ரீதியான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான தே.மதியழகன் எம்எல்ஏ பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் உள்ளிட்ட சில நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோய்களைக் கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்களின் தன்மை அறிந்து, தடுப்பு மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.

காலியாக உள்ள கால்நடை மருத்துவப் பணியாளா்கள், கால்நடை ஆய்வாளா்கள், பராமரிப்பு உதவியாளா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கால்நடை துறை மருத்துவமனை நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கால்நடை மருத்துவா்கள் வலியுறுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சம் கால்நடைகள் உள்ள நிலையில், கடந்த சில நாள்களாக பெரியம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளதாகவும், கூடுதல் தடுப்பூசிகள் தேவை என அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்த கால்நடை வளா்ப்போா் தனியாரிடமிருந்து மருந்து வாங்கி கால்நடைகளை பராமரித்து வருகின்றனா். சில கால்நடை வளா்ப்போா் நோய்த் தாக்குலுக்குள்ளான கால்நடைகளில் இருந்து பாலை கரந்து விற்பனை செய்கின்றனா். இதனால், பாலை நுகா்வோருக்கும் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.