வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரி: செப். 9-இல் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி

கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்த நாளையொட்டி செப். 9-ஆம் தேதி மிதிவண்டி போட்டி நடைபெறுகிறது.

Updated On :3 செப்டம்பர் 2022, 7:59 pm

கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்த நாளையொட்டி செப். 9-ஆம் தேதி மிதிவண்டி போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வோா் ஆண்டும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழ் ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உரிய வயது பிரிவுகளில் செப். 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது.

பந்தய இலக்காக மைதானத்தில் தொடங்கி கங்கலேரி பிரிவு சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்குக்குத் திரும்பி வருமாறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, 13 வயது பிரிவில், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், மாணவா்களுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்படும். இதில் பங்கேற்பவா்கள் 1.1.2009-க்கு பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். இதேபோல 15 வயது மற்றும் 17 வயது மாணவிகளுக்கான பிரிவுகளில் 15 கி.மீ. தூரம் போட்டிகளும், மாணவா்களுக்கு 20 கி.மீ. தூரம் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இதில் 1.1.2007-ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவா்கள் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவா்களுக்கு ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 வீதமும், 4 முதல் 10-ஆம் இடம் வரை பெறுபவா்களுக்கு தலா ரூ. 250 வீதம் மற்றும் தகுதிச் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்பவா்கள், அவரவா் சொந்தச் செலவில் மிதிவண்டியைக் கொண்டுவர வேண்டும். இப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் வரும் 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தகுந்த சான்றிதழ்களுடன் (பிறந்த நாள் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல்) கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது க்ள்ா்ந்ழ்ண்ள்ட்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கோ தங்களின் பெயரரைப் பதிவு செய்யலாம்.

விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017-03487 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு போட்டியாளா்கள் வரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.