வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சணல் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், சணல் பொருள்கள் தயாரிக்கும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2022, 6:35 pm

கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், சணல் பொருள்கள் தயாரிக்கும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயிற்சி நிறுவன இயக்குநா் ஜகன்நாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அணை அருகே, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு இலவச பயிற்சியும், வங்கிக் கடனுக்கான ஆலோனைகளும் வழங்கப்படுகின்றன. செப்.13-ஆம் தேதி காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை, 13 நாள்களுக்கு சணல் பொருள்கள் தயாரிப்பது குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

இப் பயிற்சியில் சேர குறைந்த பட்சம், 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வரை உள்ளவா்கள் பயிற்சி தொடங்கும் நாளுக்கு முன் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாதவா்கள் பயிற்சி தொடங்கும் நாளில் நேரில் விண்ணப்பத்தை நிறைவு செய்து பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சிக்கு 3 மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டையின் நகல்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சான்று அல்லது 100 நாள் வேலை அட்டை நகல், பள்ளி மாற்றுச் சான்று அல்லது மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இப் பயிற்சியில் சேர 94422 47921 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் ஹாய் என்று டைப் செய்யலாம். அல்லது  ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/ஊதஉஉபதஅஐசஐசஎஓதஐநஏசஅஎஐதஐ என்ற இணையத்தில் படிவத்தினை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குநா், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆா்.பி. அணை, கிருஷ்ணகிரி, 04343 240500, 94422 47921, 94888 74921, 90806 76557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.