கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ரமலான் நோன்பிருக்க தடை விவகாரம்: ஆசிரியர்கள் மாற்று பணி மாறுதல்
By DIN | Published On : 08th April 2022 06:05 PM | Last Updated : 01st May 2022 04:45 PM | அ+அ அ- |

நோன்பு இருக்க தடை விதித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள்.
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க தடை விதித்த விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது கொரல் நத்தம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நோன்பு இருக்க தடை விதித்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.
இதையும் படிக்க- நோன்பு இருக்க தடை விதித்த அரசுப் பள்ளி: கிருஷ்ணகிரி அருகே பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம்
இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி, கொரல் நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் உடற் கல்வி ஆசிரியர் கே. எஸ்.செந்தில்குமாரை தேன்கனிக்கோட்டை வட்டம், தொட்ட மஞ்சேரி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், கணித ஆசிரியர் என் சங்கரை கரடிக்கல் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் மாற்றுப் பணி மாறுதல் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...