கிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் சாவு
By DIN | Published On : 09th June 2022 12:04 PM | Last Updated : 09th June 2022 12:04 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள மெடுகம்பள்ளியைச் சேர்ந்தவர் நாகோஜி(40). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாச்சி (40). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயனபள்ளியை சேர்ந்தவர் சையத் காசிம்(30). லாரி ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த சபீர் உல்லா(32), நூர் முகமது (30). இவர்கள், மூன்று பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மெடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.
இதில், இரு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகோஜி, அம்மாச்சி, சையத் காசிம் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.