கிருஷ்ணகிரியில் அதிமுகவின் 51 வது தொடக்க விழாவையொட்டி கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அதிமுகவின் நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார் எம்எல்ஏ, தமிழ்ச்செல்வம் எம்எல்ஏ, காவேரிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கேபி முனுசாமி எம்எல்ஏ பேசியது: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திமுக, சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை.