1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. அவர் பல்வேறு முன்னணி நடிகர் படங்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் விக்ரம் சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா ட்விட்டரில் இணைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.