ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம், நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது.
படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.

இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
அன்பான பார்வையாளர்களே, யசோதாவின் மீதான உங்கள் பாராட்டும் அன்பும்தான் நான் கேட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய பரிசும் ஆதரவும். நான் மகிழ்ச்சியினாலும் நன்றியினாலும் மூழ்கியிருக்கிறேன். யசோதா குழுவினர் உழைத்த அத்தனை உழைப்பும் பலனளித்தது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் கேட்பதும், தியேட்டர்களில் நடந்த கொண்டாட்டங்களைப் பார்ப்பதும்தான் சான்று. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
யசோதா தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக தயாரிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இயக்குநர் அவர்களுடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
என் அன்பான சக நடிகர்களான வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் மற்ற அற்புதமான நடிகர்களுக்கு, உங்களுடன் இணைந்து பணியாற்றியதும் அருமையாக இருந்தது.
எப்போதும் நன்றியுடனும் அன்புடனும்- சமந்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதி!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

ரவுண்ட் ஆஃப் 32: தோல்வியிலும் கவனம் பெற்ற காங்கோ கோல்கீப்பர்!
விடியோக்கள்

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



