
ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை மகாராஷ்டிரத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இன்று மீண்டும் தொடங்கினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் 74-வது நாளாக ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மகாராஷ்டிரத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, இன்று இரவு மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தை தொடங்க உள்ளார்.
இதையும் படிக்க: டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது!
இந்த நிலையில் நாளை(நவம்பர் 21) சூரத் நகரில் நடைபெறும் இரண்டு பேரணிகளில் கலந்து கொள்வார் என குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு.சர்மா தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...