வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரியில் அம்பேத்கா் பிறந்த நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:48 pm

கிருஷ்ணகிரியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கா் முழு உருவச் சிலைக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினருமான தே.மதியழகன் தலைமை வகித்து, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் எஸ்.கே. நவாப், பொதுக்குழு உறுப்பினா்கள் அஸ்லம், நாகராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), தலைமை வகித்து, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி, தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ (ஊத்தங்கரை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் சாா்பில், கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா் விநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அ.செல்லக்குமாா் எம்.பி, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது, எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சில் ஜேசு, மாநிலச் செயலாளா் அக.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்பினா், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கா் சிலை, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.