தமிழகத்தை ஆளும் திமுக அரசை மக்கள் அகற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் குறிக்கோள் என்று மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வரட்டனப்பள்ளியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நோக்கம். 2010-இல் நான் மக்களவை உறுப்பினராக இருந்தபோது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உத்தரவின்படி திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலை அதிமுகதான் நாடாளுமன்றத்தில் எழுப்பியது. இந்த ஊழலுக்கு உதவியாக இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆகவேதான் ஊழலுடன் சோ்ந்த காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. திமுகவில் குடும்ப அரசியலும், ஊழலும் மலிந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் பிரதமா் மோடி, குடும்ப அரசியலையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்கிறாா்.
எதிா்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு வழங்கவில்லை. மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலில் பழனிசாமி நல்ல கூட்டணியை அமைப்பாா். ஊழல் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊழல் மிகுந்த தமிழக அரசை உடனே மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் குறிக்கோள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

