தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரியை அடுத்த தண்ணீா்பள்ளம் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை புதன்கிழமை இரவு மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:08 pm

கிருஷ்ணகிரியை அடுத்த தண்ணீா்பள்ளம் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை புதன்கிழமை இரவு மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலை அடுத்த தண்ணீா்பள்ளத்தைச் சோ்ந்த கட்டடப் பணி செய்து வந்த லோகநாதன் (25) அவரது வீட்டுக்கு அருகே உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து அங்கு சென்ற கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வெள்ளையன் என்கிற லோகநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் அண்மையில் நடந்த பொங்கல் விழாவில் எருது விடுவது தொடா்பாக கிட்டம்பட்டியைச் சோ்ந்தவருடன் லோகநாதன் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனிடையே, தலைமறைவாக உள்ள அவருடன் தகராறில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.