தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மக்களவையில் மோடி பேசியுள்ளார்.

News image

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி - நன்றி: சன்சத் டிவி

Updated On :16 ஏப்ரல் 2026, 10:01 am

அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது மக்களவையில் நடைபெறும் விவாதத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தால், நீண்டகால மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

மக்களவையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்றின் மிக முக்கிய தருணத்தில் இருக்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தனிப்பட்ட முறையில் ஆதரிப்பவர்கள் பொது வெளியில் எதிர்க்கிறார்கள்.

ஓபிசி சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி, மகளிர் இட ஒதுக்கீடு என்பது நாட்டு நலனுக்கான முடிவு. எனவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மதச் சாயம் பூச வேண்டாம்.

மகளிர் முன்னேற்றத்தை எத்தனை காலம்தான் தடுப்பீர்கள்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தவர்களை தேர்தல்களில் மகளிர் மன்னிக்கவில்லை. 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும். முதலில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர அனுமதிக்க வேண்டும். பிறகு அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம் உள்ளவர்கள் தங்கள் உரிமையை பெறும் நேரம் வந்துவிட்டது. இது பெண்களின் சலுகை அல்ல, அவர்களுக்கான உரிமை என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், தொகுதி மறுவரையறை குறித்து பேசிய மோடி, இங்குள்ளவர்கள் ஒரு சில மாநிலங்களின், ஒரு பகுதியின் நன்மையை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. தொகுதி மறுவரையறை குறித்த கேள்விகளுக்கு அமித் ஷா விளக்கம் அளித்துவிட்டார். தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலத்துக்கும் அநீதியோ பாகுபாடோ இருக்காது. எந்தவொரு விவகாரத்திலும் எந்த மாநிலத்துக்கும் அநீதியோ, பாகுபாடோ ஏற்படாது. தொகுதி மறுசீரமைப்பில், மாநிலங்களுக்கான விகிதாசாரத்தில் மாற்றமில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட திருத்த மசோதா மீது மக்களவையில் 15 - 18 மணி நேர விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 4 மணிக்கு வாக்களிப்பு நடைபெறும். இன்று காலை முதல் மக்களவை உறுப்பினர்கள், விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்கள்.

அப்போது அவர் பேசுகையில், மக்களிடையே தொகுதி மறுவரையறை குறித்து அச்சம் உள்ளது. ஆனால், எந்த மாநிலத்துக்கும் அநீதி நேரிடாது என்றார். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால், அதற்குரிய பெருமையை நீங்களே எடுத்துக் கொள்ளலாம் என்று நான் பத்திரம் எழுதிக் கொடுக்கிறேன் என்றார்.

Summary

Modi has spoken in the Lok Sabha, saying that opposing the bill will lead to dire consequences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.