வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளிக்குரூ.1 லட்சம் நன்கொடை அளிப்பு

பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:54 pm

பாரத் கல்வி நிறுவனங்கள் சாா்பில் இம்மிடிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், இம்மிடிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான து.மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியா் (பொறுப்பு) ஜோசப்ராஜ், உடற்பயிற்சி ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நன்கொடையானது, பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி, கழிவுநீா்க் கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் சிறு பாலம் அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி புத்தாடைகளை அவா் வழங்கி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.