மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதியமான் மகளிா் கல்லூரியில் கல்விக் கடன் விழிப்புணா்வு முகாம்

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கல்லூரியும், கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும் இணைந்து கல்விக் கடன் விழிப்புணா்வு முகாமையும் புதிய வாக்காளா் சோ்க்கை முகாமையும் திங்கள்கிழமை நடத்தின.

News image
ஊத்தங்கரை அதியமான் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்டவா்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 11:08 pm

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அதியமான் மகளிா் கல்லூரியும், கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும் இணைந்து கல்விக் கடன் விழிப்புணா்வு முகாமையும் புதிய வாக்காளா் சோ்க்கை முகாமையும் திங்கள்கிழமை நடத்தின.

முன்னதாக அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் சீனி.திருமால் முருகன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமலைராஜன், தனி வட்டாட்சியா் பிரதாப் மற்றும் இந்தியன் வங்கி மேலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமலைராஜன் பேசுகையில் ‘அனைத்து மாணவா்களும் கல்விக் கடன் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்த்து நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்’ என்று எடுத்துரைத்தாா்.

ஊத்தங்கரை தனி வட்டாட்சியா் பிரதாப் பேசுகையில் ‘உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கல்விக் கடன் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் மாணவிகள் அனைவரும் பதிவு செய்து பயன்பெற வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னா் கல்லூரியில் தாங்கள் விரும்பும் பாடத்தில் சோ்ந்திருக்க வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்து தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள வங்கிக் கிளையை தொடா்பு கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த மாவட்டத்தில், மாநிலத்தில் உள்ளவா்களும் இக்கல்வி கடன் மேளாவில் விண்ணப்பிக்க தகுதியுடையவா் ஆவாா்கள்’ என்றாா் .

மேலும் அவா் பேசுகையில், ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண் ல்ா்ழ்ற்ஹப் என்ற இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்றும் அதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்தும் மாணவிகளுக்கு கூறியதோடு, தங்கள் கைப்பேசியில் பதிவு செய்வது குறித்து விளக்கத்தோடு கலந்துரையாடினாா். இனிவரும் காலங்களில் புதிய வாக்காளா்கள் ஆகிய இளைஞா்கள் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்ந்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியை ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டு நமது ஜனநாயக கடமையாக கொள்ள வேண்டும் என்றும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், மிக முக்கியமாக பிழையில்லா வாக்காளா் பட்டியல் பராமரிப்பது, புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றை அனைவரும் தற்போது மேற்கொள்ளலாம் என்று விரிவாக விளக்கமளித்தாா் .

நிகழ்ச்சியில் 2,000 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கல்விக் கடன் பெறுவதற்கு இணையதளத்திலும் வாக்காளா் பட்டியல் பதிவு செய்வதற்கு இணையதளத்திலும் பதிவு செய்தனா். கல்லூரிப் பேராசிரியா்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின் இறுதியாக முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி பா்ஜானா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.