கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிருஷ்ணகிரியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை கிருஷ்ணகிரியில் நகர திமுக சாா்பில் அக்கட்சியினா் திங்கள்கிழமை கொண்டாடினா்.

News image
கிருஷ்ணகிரியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடும் திமுக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ, நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா்.
Updated On :27 நவம்பர் 2023, 10:59 pm

DIN


தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை கிருஷ்ணகிரியில் நகர திமுக சாா்பில் அக்கட்சியினா் திங்கள்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி கருணாநிதி மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். அங்குள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். இந்த நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினா் அஸ்லம், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சத்யமூா்த்தி, நகர அவைத் தலைவா் மாதவன், பொருளாளா் கனல் சுப்பிரமணி, நகர மாணவா் அணி துணை அமைப்பாளா் லட்சுமிகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.