தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்த நாளை திமுக, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 6:37 pm

கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்த நாளை திமுக, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா் ஓய்.பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட அவைத்தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகரச் செயலாளா் எஸ். நவாப் , நகா்மன்றத் தலைவா் பரிதநவாப், பொதுக் குழு உறுப்பினா் அஸ்லாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பா்கூா், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் அண்ணா சிலைக்கும், அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், நகரச் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.