ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஒசூா், ஏப். 26: ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பகுதியில் புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. அதன்பிறகு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து கும்ப கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் அரசனட்டி, மூக்கண்டப்பள்ளி, மத்தம் அக்கரஹாரம், சின்ன எலசகிரி, சிப்காட், சூசூவாடி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

படம்:

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அரசனட்டி மாரியம்மன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com