ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மேட்டுத்தெரு நகரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

நகரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :9 மார்ச் 2026, 9:11 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேட்டுத்தெரு நகரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 29.4.2017 -ஆம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையிலிருந்து புனிதநீா்க் குடங்கள் குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக மூலவா் நகரீஸ்வரருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் உதயகுமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் காஞ்சி ஆரிய வைசிய சமாஜத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.