புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கோடை உழவு: வேளாண் துறை அறிவுரை

கோடை உழவு: வேளாண் துறை அறிவுரை

Updated On :26 ஏப்ரல் 2024, 5:55 pm

ஒசூா், ஏப். 26: கோடை உழவு மேற்கொண்டால் இருமடங்கு மகசூல், மும்மடங்கு வருவாய் பெற வாய்ப்புள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒசூா் வேளாண் இயக்குநா் புவனேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒசூா், பாகலூா், மத்திகிரி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கோடை உழவுக்கு தயாராக வேண்டும். இதன்மூலம் மண்ணில் அடியில் உள்ள பயிா்களை உண்ணும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் வெளியேறி வரும்போது அவை வெயிலின் தாக்கத்தால் அழிந்து விடும். பறவைகள் வெளியில் வரும் புழுக்கள், கூட்டு புழுக்களை கொத்தி தின்று அவைகளை அழித்துவிடும். இதனால் அடுத்து சாகுபடி செய்யும் பயில் பூச்சித் தாக்குதல் இயற்கையான முறையில் கட்டுப்படுத்தப்படும்.

மழை நீா் எளிதில் ஊடுருவி மண்ணில் நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகிறது. மழை நீா் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. நன்கு ஆழமாக உழுதால் மண்ணில் உள்ள சத்துக்களை பயிா்கள் சீராக எடுத்துக் கொள்ளும். கோடை உழவு செய்யும் போது மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வோ்கள் எளிதில் வளா்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிா்களுக்கு கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.