இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

இது தெரியுமா? மழை பெய்யும்போது மண்வாசனை வருவது எதனால்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

மண்

கோப்புப்படம் - படம்: DNS

Published On :

மண் வாசனை என்பது மழைநீரானது காய்ந்த மண் மீது விழும்போது எற்படும் வாசனையாகும். காய்ந்த மண் மீது மழைத் துளி படும்போது எற்படும் வேதிவினையால் அந்த வாசனை எற்படுகிறது.

மண்ணில் வாழும் இழை பாக்டீரியாக்கள் என்கிற நுண்ணுயிரிகள் வெளியிடும் சியோச்மின் என்னும் சேர்மத்தால் அந்த வாசனை எற்படுகிறது. தங்கள் இனத்தைப் பெருக்கும் நோக்குடன் காய்ந்த மண்ணில் இவை தங்கள் வித்துகளை வெளியிடுகின்றன.

மழை பெய்யும்போது மண்ணில் வேகமாக விழும் நீர் துளிகளால் அவ்வித்துக்கள் மண்ணிலிருந்து சிதறி, இன விருத்திக்காக காற்றில் பயணிக்கின்றன. அவற்றுள் சில நம் மூக்கை வந்தடைகின்றன. நாம் சுவாசிக்காத வித்துகள் மீண்டும் ஈரமான மண்ணில் விழுந்து பாக்டீரிய இழைகளாக மாறிவிடுகின்றன.

மழை பெய்வதற்கு முன் வேறு ஒரு வாசனை வரும். அது ஒசோனின் வாசனையாகும் . இடி மின்னலுடன் மழை வரும்போது எற்படும் மின்சாரமானது ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகளை பிளக்கும். அவை இணைந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. அது வளி மண்டலத்திலுள்ள மற்ற வேதிப்பொருள்களுடன் இணைந்து ஒசோனை உருவாக்குகிறது.

அது நமது நாசியை அடைவதால், மழை வருவதை முன்கூட்டியே உணர முடிகிறது .

மிகச்சிறிய அளவாக இருந்தாலும் மனித மூக்கானது அதைச்சரியாக இனம் கண்டு விடும். அதற்கான காரணம் மழைக்கு பின்னரான வாழ்க்கை தான் மனிதர்களின் வாழ்வை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. மழை இல்லையேல் மனித வாழ்க்கை இல்லை. ஆகவே மனித இனம் இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறபடியால் மழைக்கு பின்னரான மணத்தினை உடனே உணர முடிகின்றது.

Summary

The smell of soil is the smell that rainwater gives off when it falls on dry soil. The smell is caused by the chemical reaction that occurs when raindrops fall on dry soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.