ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சுகாதார ஊக்குநா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தொகுப்பூதியம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதார ஊக்குநா்கள் மனு அளித்தனா்.

News image
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த சுகாதார ஊக்குநா்கள்.
Updated On :16 டிசம்பர் 2024, 8:58 pm

Din

ஒசூா்: தொகுப்பூதியம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதார ஊக்குநா்கள் மனு அளித்தனா்.

ஓட்சா ஊராட்சி பணியாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சுமாா் 10 ஆண்டுகளாக சுகாதார ஊக்குநா்களாக பணியாற்றி வருகிறோம். பத்து ஆண்டுகளாக ஊதியம் இன்றி கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு, கழிவறை கட்டுவதற்கு மக்களை ஊக்குவித்து விழிப்புணா்வு வழங்குதல், பள்ளி, அங்கன்வாடி மையங்களில் கழிவறை குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்துதல், கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தொகுப்பூதியமாக ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தும், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.